கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (64). இவர் கம்பத்திற்கு வேலை வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாமல் கம்பம் பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக படுத்து கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.