உத்தமபாளையம்: முன்விரோதத்தால் முதியவர் மீது தாக்குதல்

80பார்த்தது
உத்தமபாளையம்: முன்விரோதத்தால் முதியவர் மீது தாக்குதல்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவரது மகன் விக்னேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று பிரபு உள்ளிட்ட மூன்று பேர் ராஜேந்திரனை தாக்கியுள்ளனர். இதில் அவர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் பிரபு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.