கம்பம்: புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

50பார்த்தது
கம்பம்: புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கம்பத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தன்னார்வலர் குழு சார்பில் கம்பத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது கம்பம், உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அன்பு அறம் செய் தன்னார்வ குழு மற்றும் கம்பம் வடக்கு காவல் நிலையம் இணைந்து பொது மக்களுக்கு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் பார்த்திபன் அவர்களின் வழிகாட்டுதலில் உதவி ஆய்வாளர் நாகராஜன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான கம்பம் சிக்னல் அருகில் புகையிலை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும், புகையிலை விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும், புகையிலையை விற்பவர்களை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும், பொதுமக்கள் புகையிலை முற்றிலும் தவிர்க்க வேண்டும், புகையிலை நம் உடலுக்கு தீங்கு உண்டாக்கும், புகை நமக்கு என்றும் பகை, புகையிலை உட்கொள்வதால் வாய் புற்றுநோய் மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்பன புகையிலையால் ஏற்படும் தீமைகளை பற்றி எடுத்துக் கூறினார்.

தொடர்புடைய செய்தி