தமிழக கேரள எல்லை குமுளி அருகே உள்ள முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அணில் ஜெயின் தலைமையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஆய்வுக்குப் பின்பு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஆய்வு அறிக்கை மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேசிய பாதுகாப்பு ஆணையத்திடம் வழங்க உள்ளனர்.