கம்பம் நகரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

52பார்த்தது
தேனி மாவட்டம் கம்பம் நகரில் வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று மார்ச் 18 பிற்பகல் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கனி தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வனராஜன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவி கல்வி அலுவலர், சமூக நலத்துறை வட்டார அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் ஆசிரியர்கள் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி