உத்தமபாளையம்: மது போதையில் பாட்டியை கொன்ற பேரன் கைது

51பார்த்தது
உத்தமபாளையம்: மது போதையில் பாட்டியை கொன்ற பேரன் கைது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கருக்கோடை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மாள் (80). இவரது மகள் வழிப் பேரன் முத்துச்செல்வன் (26). இவர் மது போதையில் தினமும் பாட்டியுடன் தகராறு செய்வது வழக்கம். 

இந்நிலையில் வீட்டின் முன்பாக பாட்டியுடன் ஏற்பட்ட தகராறில் பேரன் பேவர் பிளாக் கல்லால் பாட்டியின் தலையில் அடித்துள்ளார். இதில் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கோம்பை போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து முத்துச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.