உத்தமபாளையம் அருகே கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள்

0பார்த்தது
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்தவ மக்கள் கல்லறை திருநாள் கொண்டாடுகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் இந்த திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அருள்தந்தையர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து, புனித நீர் தெளித்து கல்லறைகளை மந்திரித்தனர். மறைந்த முன்னோர்களின் ஆன்மாவை நினைத்து மக்கள் படையல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.