தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய கடும் வெயிலுக்குப் பிறகு, இன்று மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மானாவாரி விவசாயத்திற்கும் இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.