கம்பம்: வேலைக்கு பெண்களை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்து

1255பார்த்தது
தேனி மாவட்டம் கம்பம் அருகே ஏலத் தோட்ட வேலைக்கு பெண் விவசாயக் கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப், கேரளாவின் இடுக்கி மாவட்டம் அணைக்கரை அருகே கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அபி உட்பட 10 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.