கம்பம் : தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளுடன் ஒருவர் கைது

74பார்த்தது
கம்பம் : தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளுடன் ஒருவர் கைது
கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக கம்பம் மெட்டு சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த செல்வராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் 780 விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி