கம்பம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மக்களைத் தேடி மருத்துவம்தேனி மாவட்டம் கம்பம் நேதாஜி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை, சளி இருமல் உள்ளிட்ட நோய்கள் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நோயாளிகளுக்கு மருந்துகள் மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் மக்களைத் தேடி மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சையளித்தனர்