தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம்களை தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி அலுவலர்களிடம் பொதுமக்களின் வாக்காளர் படிவங்கள் சரியான முறையில் நிரப்பப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து அவர் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் சாதிக் ஆகியோர் உடனிருந்தனர்.