முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியது

0பார்த்தது
முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியது
பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று மாலை 6 மணியளவில் அணை நீர்மட்டம் 140 அடியை நெருங்கியதால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரளாவின் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி