தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இன்று காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நகராட்சி துணைத் தலைவர் சுனோதா, சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.