சின்னமனூர் வேளாண் அறிவியல் மையத்திற்கு தேசிய விருது

72பார்த்தது
சின்னமனூர் வேளாண் அறிவியல் மையத்திற்கு தேசிய விருது
தேசிய அறிவியல் கழகம் சார்பில் சிறப்பாக செயல்படும் விஞ்ஞானிகள், வேளாண் அறிவியல் மையங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதன்படி, அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற 32-வது பொதுக்குழு கூட்டத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் பல்வேறு பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த வேளாண்மை அறிவியல் மையத்துக்கான தேசிய விருதை பெற்றது.

தொடர்புடைய செய்தி