தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட பிரசவ மற்றும் பச்சிளம் குழந்தைகள் கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் மருத்துவமனையை நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.