பெரியகுளம்: குடும்பப் பிரச்சனையால் பெண் தற்கொலை

630பார்த்தது
பெரியகுளம்: குடும்பப் பிரச்சனையால் பெண் தற்கொலை
பெரியகுளம் அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக நிதர்ஷனா தேவி (30) என்பவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மதுரையில் சிவபாலன் என்பவரை மணந்த இவருக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக தந்தையுடன் வசித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி