தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொகுதி தலைவர் அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பது போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் இணைச் செயலாளர் ஹக்கீம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.