கம்பம் மெட்டு கழிவுகளை கொட்ட வந்தவருக்கு அபதாரம்

1பார்த்தது
கம்பம் மெட்டு கழிவுகளை கொட்ட வந்தவருக்கு அபதாரம்
கம்பம் மெட்டு சோதனை சாவடி அருகே சந்தேகத்திற்கிடமான கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தை வனத்துறையினர் சோதனை செய்தனர். விசாரணையில், கட்டப்பனையைச் சேர்ந்த சன்னி பிரான்சிஸ் என்பவர் தனது காய்கறி கடை கழிவுகளை தமிழகப் பகுதியில் கொட்டுவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கேரளாவிலிருந்து கழிவுகளை தமிழகத்தில் கொட்ட முயன்ற குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி