தமிழக அரசின் உத்தரவின் பேரில், தேனி மாவட்டத்தில் எஸ்.பி. சினேகப்பிரியா மேற்பார்வையில், 5 சப்-டிவிஷன்களுக்கும் தலா ஒரு எஸ்.ஐ., 4 போலீசார் கொண்ட போதைப்பொருள் தடுப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் சில்லரை மது விற்பனையைத் தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.