தேனி: நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

0பார்த்தது
தேனி: நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி தென்றல்நகரில் வசிக்கும் இந்திராணி (60) என்பவர் நேற்று முன்தினம் மாலை தனது பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து இந்திராணியின் மகன் கார்த்திக் அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீஸார் செயினைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி