தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் சப்-டிவிஷன் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் மொத்தம் 92 துப்பாக்கிகள் வங்கிகள் மற்றும் தனிநபர்களுக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்று (பிப். 16) முதல் பிப். 18 வரை மூன்று நாட்களுக்குள் அனைத்து துப்பாக்கிகளையும் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.