மத்திய வங்கக்கடல் பகுதிகளிலிருந்து சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன்காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.