தேனி: கடைகள், கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

601பார்த்தது
தேனி: கடைகள், கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
டி. சுப்புலாபுரம் வடக்குத் தெருவில் புதுராஜா என்பவரின் பலசரக்குக் கடையில் சனிக்கிழமை இரவு பூட்டை உடைத்து ரூ.62 ஆயிரம் மற்றும் 3 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இதேபோல், அதே பகுதியில் முருகேசன் என்பவரின் பலசரக்குக் கடையிலும் பூட்டை உடைத்து ரூ.22 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. மேலும், கதர் கடை அருகே உள்ள செல்வ விநாயகர் கோயிலின் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி