சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தேனியைச் சேர்ந்த மாணவர் ரோகித் அர்ஜுன் 400 மீட்டர் ஸ்கேட்டிங்கில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். இவர் இந்தோனேசியாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.