தமிழ்நாடு மாநில அளவிலான 'சூழல் அறிவோம்' வினாடி-வினா போட்டிக்கு விண்ணப்பிக்க இன்று, நவம்பர் 5 கடைசி நாள். 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த காலநிலை மாற்றம் குறித்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.50,000 வரை பரிசு வழங்கப்படும். www.tackon.org/soozhal என்ற இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 2 மாணவர்கள் கொண்ட 5 குழுக்கள் பதிவு செய்யலாம்.