தேனியில் இருந்து குமுளி நோக்கி இன்று காலை சென்ற அரசு பேருந்து, குமுளி மலைச்சாலையில் மாதா கோவில் அருகே உள்ள கொண்டை ஊசி வளைவில் திடீரென பழுதாகி நின்றது. பேருந்தில் இருந்த பயணிகள் வேறு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக குமுளி மலைச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.