தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அமைந்தன்பட்டி ரைஸ் மில் தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் ஜெயபாரதி. இவர் இராணுவத்தில் பணிபுரிந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். உத்தமபாளையம் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அறையில் ஏற்பட்ட புகையால், மூச்சு திணறி இறந்துள்ளார். பிரேதத்தை மீட்ட உத்தமபாளையம் போலீசார், இராணுவ வீரர் இறப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.