மதுரையில் தவெக மாநாடு நடைபெறும் பாரபத்தி அருகே அமைந்துள்ள ஆவியூரில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடையில் தவெக துண்டை அணிந்தவர்கள் திரண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து அங்கு கூடியிருந்தவர்களை லத்தியைக் கொண்டு விரட்டி அடித்தனர். இதையடுத்து, தவெக துண்டு அணிந்திருந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.