
பெரியகுளம் பள்ளிப் பேருந்து கண்ணாடி உடைப்பு ஒருவர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பங்களாப்பட்டி பகுதியில், தனியார் பள்ளி மாணவியர்களை ஏற்றச் சென்ற பள்ளி வாகனத்தின் கண்ணாடியை ஹரி என்பவர் உருட்டுக்கட்டையால் தாக்கி உடைத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஓட்டுநர் லேசான காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெரியகுளம் போலீசார் ஹரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




























