தேனி அருகே அரண்மனைபுதூரைச் சேர்ந்த பத்ரகாளி (55) என்பவர் தண்டவாளத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ரயில் மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சுமார் 19 ஆடுகளும் உயிரிழந்தன. இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.