தேனி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பகுதிகளில் பால் விற்பனை செய்து வருகின்றார். இவர் மாலை அல்லிநகரம் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பைக்கில் பால் விநியோகிக்க சென்று கொண்டிருந்தபோது, இவருக்கு பின்னால் வந்த கார் இவரது பைக்கை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இவ்விபத்தில் பால் அனைத்தும் வீணானது. இதுகுறித்த CCTV காட்சிகளை வைத்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.