தேனி நகராட்சியில் பிட்டராக பணியாற்றி வரும்பவர் வேல்முருகன். இவர் உடன் பணியாற்றி வரும் ஊழியர்கள் குறிஞ்சி நகர் பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த கௌசிக் என்பவர் மோட்டார் பொருத்தி குழாயில் தண்ணீர் பிடித்துள்ளார். அதனை வேல்முருகன் எச்சரித்த நிலையில் கௌசிக், அவரது தந்தை சரவணன் ஆகியோர் அலுவலகம் புகுந்து வேல்முருகனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தேனி போலீசார் இருவர் மீதும் நேற்று (மே. 9) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.