தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சர்வதேச அளவிலான கிக்பாக்சிங் போட்டி மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேரில் அழைத்து வாழ்த்தி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் வீரர்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டன.