தேவதானப்பட்டியில் பைக் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

68பார்த்தது
தேவதானப்பட்டியில் பைக் மோதியதில் முதியவர் உயிரிழப்பு
கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (63). இவர் அவரது உறவினரின் வீட்டு விழாவிற்காக நேற்று முன்தினம் பைக்கில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி உள்ளார். கொடைக்கானல் சாலை அருகே வந்தபோழுது பைக்கின் சங்கிலி அறுந்துள்ளது. அதனால் ரோட்டின் ஓரமாக நின்றுள்ளார். அப்போழுது அவ்வழியாக வந்த பைக் பெருமாளிடம் மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நேற்று (ஜூன் 1) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி