தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் (38). அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யோகேஷ்வரன் (33). இவர்களுக்கிடையே தொழில் போட்டியால் முன் விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாண்டியராஜனை, சம்பவ இடத்தில் வைத்து யோகேஷ்வரன் உள்ளிட்ட 4 பேர் தாக்கியுள்ளனர். திடீரென யோகேஷ்வரன் கத்தியால் பாண்டியராஜனை குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் யோகேஷ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.