தேவதானப்பட்டி கிளை நூலகத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் முழுநேர கிளை நூலகத்திற்கு கலந்தாய்வு மூலம் நூலகர் சிவராமன் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவருக்கு நூலக ஆணைக்குழுவின் மூலம் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், தேனி மாவட்ட அனைத்து நூலகர்களும் பங்கேற்று அவரை வரவேற்றனர்.