பெரியகுளம்: சிறுமி திருமணம்; 5 பேர் மீது போக்சோ வழக்கு

64பார்த்தது
பெரியகுளம்: சிறுமி திருமணம்; 5 பேர் மீது போக்சோ வழக்கு
பெரியகுளம் பகுதியில் 16 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்கவுதம் (19) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், ஜூன் 11 அன்று கோயிலில் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில், பெரியகுளம் மகளிர் போலீசார் சிறுமியின் கணவர் ராஜ்கவுதம் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி