தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி கிராமத்தில், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காவல்துறையினர் வழிகாட்டலின்படி, 48க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், நெகிழிப்பை ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்கள் ரஞ்சித்குமார் மற்றும் ரமேஷ் ஆகியோர் மூலம் ஏற்படுத்தப்பட்டது. சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.