பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்த சகாயராஜ் மகன் அபிஸ் அமலன் (22). இவர் தனது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த சேதுராமனுடன் (24) இரு சக்கர வாகனத்தில் க. விலக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டு, பெரியகுளத்துக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
தேனி-மதுரை சாலையில் சிட்கோ தொழில் பேட்டை அருகே சென்றபோது, எதிரே ஆண்டிபட்டி அருகேயுள்ள நாச்சியார்புரத்தைச் சேர்ந்த தர்மராஜ் மகன் பாரதிராஜா (32) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் இவர்களது இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த அபிஸ் அமலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாரதிராஜா அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து தேனி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.