தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பகவதி அம்மன் கோயிலில் திலகர் முதியவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். கோயில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை கோயிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை புரிந்து கொண்ட சிறுமிகள் பதறி அடித்து கோயிலில் இருந்து வந்து நடந்ததை பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்