தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 45 ஆண்கள் மற்றும் 1 பெண் பணியிடங்களில் சேர விரும்புவோர் தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஐ.டி.ஐ. வளாக கட்டடத்தில் இயங்கிவரும் ஊர்க்காவல் படை அலுவலகத்தை நேரில் அணுகி டிசம்பர் 3, 2025 அன்று விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 6 மாலைக்குள் தேனி மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.