தேனி: கள்ளக்காதல் விவகாரம்.. ரயில் தண்டவாளத்தில் படுத்து இளஞ்சோடிகள் தற்கொலை

53பார்த்தது
தேனி: கள்ளக்காதல் விவகாரம்.. ரயில் தண்டவாளத்தில் படுத்து  இளஞ்சோடிகள் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவருக்கு திருமணமான நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா (21) என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் தற்கொலை செய்யும் நோக்கில் நேற்று (மார்ச் 11)  இரவு போடியிலிருந்து சென்னை நோக்கி அதிவிரைவு ரயில் சென்ற போது தேனி அருகே உள்ள குன்னூர் ரயில்வே தண்டவாளத்தில் இருவரும் படுத்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவத்தை அறிந்த ரயில்வே போலீசார் உடல்களை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி