தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த காயத்ரி என்பவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து பெரியகுளம் நகர தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் காயத்ரியை நேரில் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர். இதில் நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.