தேனி அருகே அல்லிநகரம் பகுதியில் உள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமத் ஆஞ்சநேயர் திருக்கோயில், ஸ்ரீ அனந்த லட்சுமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு -108 பெண்கள் புனித தீர்த்த நீரை சுமந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். கோபுர கலசங்கள் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக மேளதாளம் தேவராட்டம் உடன் கோவிலுக்கு சென்றடைந்தனர்.