தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் போடிகரட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் தேவராட்டம் நேர்த்தியான முறையில் நடைபெற்றது.
இந்த தேவராட்டம் புத்தகத் திருவிழாவுக்கு வருகை புரிந்த வாசகர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்ததால் மாணவர்களை பொதுமக்கள் கைதட்டி கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள்