தேனியில் இருந்து நேற்று பஸ்ஸில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடமலைக்குண்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பஸ்ஸில் சோதனை செய்தபோது, 12 பண்டல்களில் 12.640 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கஞ்சா கடத்தி வந்த பாண்டி மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.