தவெக அமைச்சரவையில் காங்கிரஸை சேர்ந்த 2 பேர் இடம்பெறவுள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், “59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் ஆடை அணிந்த காங்கிரஸ் கட்சியினர் இருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அமைச்சரவையில் இடம்பெறுவது வரலாற்று சிறப்புமிக்க தருணம்” என குறிப்பிட்டுள்ளார்.