தமிழகத்தில் SIR பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாம்பரத்தில் ஒரே கதவு எண்ணில் 360 வாக்காளர்கள் உள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் மற்றொரு வீட்டில் 250 வாக்குகள் உள்ளன என கூறியுள்ளார். தி.நகர் தொகுதியில் அதிக போலி வாக்குகள் இருக்கின்றன. சென்னையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் குளறுபடி நடக்கிறது என தெரிவித்துள்ளார்.