நாசா ஆய்வாளர்களின் கருத்துப்படி, நமது பால்வெளி மண்டலத்தில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் வரை இருக்கிறதாம். இந்நிலையில், 2015 ஆம் ஆண்டில் வெளியான பிரபல நேச்சர் பத்திரிகை ஆய்வு அறிக்கையின் படி பால்வெளி அண்டத்தை காட்டிலும் உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 3.04 டிரில்லியன் மரங்கள் உள்ளன என கூறப்பட்டுள்ளது.